சென்னை : தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 25ம் தேதிக்கு முன்னதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் சரணடைய வேண்டும் என்றும், திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரீமியர் மில் அபகரிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அங்கம்மாள் காலனி அபகரிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் உட்பட 11 பேர் 24 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகர் கலவரத்திற்கு புகழ்பெற்றதாகி வருகிறது. சமீபத்தில் அங்கு நடந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலவரம் கட்டுக்குள் வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே நேற்று மீண்டும் அந்நகரில் கலவரம் வெடித்துள்ளது. இந்த சம்பவங்களால் எல்லைப் பாதுகாப்புப் படையினர், துணை நிலை ராணுவப் படையினர் என மொத்தம் 500 ராணுவ வீரர்கள் கராச்சி நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியாத்தம், ஜூலை 17: குடியாத்தம் அருகே காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, காதலனின் தந்தையை மாணவியின் உறவினர்கள் அடித்துக் கொலை செய்ததால் பதட்டம் நிலவுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.
குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எத்திராஜுலுவின் மகள் பவளக்கொடி (21). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் பிஏ 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதியின் (63) மகன் லாரி டிரைவர் அகத்திபாபு (30) என்பவர் காதலித்து வந்தார்களாம்.
இதுகுறித்து எத்திராஜுலு மகளிடம் கேட்டாராம். தனது காதல் விவகாரம் தந்தைக்குத் தெரிந்ததால் மனமுடைந்த பவளக்கொடி சனிக்கிழமை விஷம் அருந்தினாராம். இதில், அவர் இறந்தார். அவரது சடலம் அடக்கமும் செய்யப்பட்டதாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை எத்திராஜுலுவின் உறவினர்கள் சிலர் சென்று கருணாநிதியை அழைத்து வந்து பேச்சு நடத்தினார்களாம். உனது மகனால்தான் பவளக்கொடி இறந்தார் என கேட்டு அவரைத் தாக்கினார்களாம்.
இதில் படுகாயமடைந்த கருணாநிதி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் சின்னராஜாகுப்பம் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.
அங்கு அதிரடிப்படை போலீஸôர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பட்டாபி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
மும்பை, ஜூலை.18: மும்பை பத்திரிகையாளர் ஜோதிர்மய் தேவ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
எனினும் மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிடவில்லை.
அந்தக் காரணங்களுடன் விரிவான தீர்ப்பு பின்னர் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மும்பை பிரஸ் கிளப், மராத்தி பத்ராகர் பரிஷத் மற்றும் முன்னாள் பத்திரிகையாளர்கள் எஸ்.பாலகிருஷ்ணா, கேதன் திரோத்கர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
தற்போது இந்த வழக்கை மும்பை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
NEW DELHI: Tamil Nadu's first family has been singed by the 2G scam. On Monday, the CBI charged Kanimozhi, DMK chief M Karunanidhi's daughter, of conspiring with former communications minister A Raja to receive a bribe of Rs 200 crore which was allegedly routed to DMK's Kalaignar TV.
Kanimozhi along with Kalaignar TV CEO Sharad Kumar, Cineyug Films' Karim Morani and Kusegaon Fruits and Vegetables' Asif Balwa and Rajiv B Agarwal have been named in CBI's second chargesheet for conspiracy and under the Prevention of Corruption Act.