Showing posts with label tamilnadu india news. Show all posts
Showing posts with label tamilnadu india news. Show all posts

Monday, 18 July 2011

வாலிபருக்கு திடீர் நெஞ்சுவலி : புறப்பட்ட சில நிமிடத்தில் விமானம் தரையிறங்கியது!

சென்னை : மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.15 மணிக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் தோகாவுக்கு கிளம்பியது. மேலே பறக்க தொடங்கியதும் கோவையை சேர்ந்த தர்மராஜ் முரளி (30) என்பவருக்கு கடுமையாக நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார். இதை பார்த்த பணிப்பெண்கள், விமானிக்கு தெரிவித்தனர். விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, விமானத்தை தரையிறக்க உத்தரவு பிறக்கப்பட்டது. இதன்பிறகு விமானம் தரை இறங்கியது. தயாராக இருந்த டாக்டர் குழுவினர், விமானத்தில் ஏறி முரளிக்கு முதலுதவி சிசிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்சில் ஏற்றி, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதன்பிறகு, 125 பயணிகளுடன் காலை 6 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

முபாரக்:கோமா

எகிப்து முன்னாள் பிரதமர் ஹோஸ்னி முபாரக்(83). இவரது 30 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து தற்போது ராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. ஆட்சியில் இருந்த போது லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொன்று குவித்ததாகவும் முபாரக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு மற்றும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் செங்கடல் பகுதியில் உள்ள ஷாம் எல் ஷேக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி தொடங்க உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவமனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மயக்கத்தில் இருந்து அவரை மீட்க போராடி வருகின்றனர்.

ரகசிய அறை : ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்காத நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ கைலாய தலங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலிலும் பாதாள அறை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று பாதாள அறையை தோண்டி பார்த்தனர். ஆனால் விலை மதிப்பு மிக்க தங்க ஆபரணங்களோ, வெள்ளி பொருட்களோ கிடைக்கவில்லை. முன்காலத்தில் இந்த இடம் தியான அறையாகவோ அல்லது சுனை சுப்பிரமணியர் சன்னதி முன் இருப்பதால் சுனை எனப்படும் நீருற்று பகுதியாகவோ இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சுனாமி வருவதை கண்டறிய புதிய வழிமுறை இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சாதனை

ஜப்பானைத் தாக்கிய மிகப்பெரிய பூகம்பம் அதன் விளைவான பயங்கர சுனாமிப் பேரலை ஆகியவற்றிற்கு முன் வானில் சில அடையாளங்கள் ஏற்பட்டதாக இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 250 கிமீ உயரத்தில் இந்த அடையாளம் ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த அடையாளத்தை வைத்து சுனாமி தாக்கும் சரியான நேரத்தைக் கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மார்ச் 11ஆம் தேதியன்று ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பமும் அதனையடுத்து பெரிய ஆழிப்பேரலைகளும் ஏற்பட்டன.

இந்தப் பேரலைகள் கடலின் அடியில் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கும் தருணத்தில் வானில் பச்சை நிறத்தில் ஒரு ஒளிஇழை ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. சூரிய ஒளியினால் விண்வெளியில் உள்ள அணுத்திரண்மங்கள் பிளவுண்டு பிறகு ஒன்று சேருகின்றன. இதனால் இந்த "ஏர்குளோ" (Air glow) ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுனாமிப் பேரலை கடலுக்கு அடியில் பிராயணித்துக் கொண்டிருக்கும் போது விண்வெளி புவியீர்ப்பு அலைகளை ஏற்படுத்துகிறது. இந்த அலைகள் வானில் பல கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு தன்னை பரவச்செய்யும் தன்மை கொண்டது. இதனால் விண்வெளியில் ஏற்படும் மாற்றமே இந்த பச்சைக் கீற்று போன்ற அடையாளம். காற்றின் அடர்த்திக் குறைவதால் இதனை படம் பிடிக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது போன்ற படங்களை வைத்துக் கொண்டு இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர் ஜொனாதன் மகேலா பிரான்ஸ், பிரேசில், நியூயார்க் பல்கலை. ஆஅய்வாளர்களுடன் இணைந்து இந்த அடையாளம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் ஏற்படுத்தப்படும் இந்த அலையின் சில மூலக்கூறுகள் ஜப்பானிய சுனாமியை அறிவுறுத்துவதாய் இருந்ததாக கண்டு பிடித்துள்ளனர்.

இருப்பினும் இது போன்ற ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதால் உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் சுனாமிக்கு முன்பாக வானில் அதன் அடையாளம் தெரிவது என்பது நமக்கு பல வகையில் பயன்படக்கூடியது என்று இந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சக்தி வாய்ந்த கேமராக்களைக் கொண்டு இந்த மாற்றங்களை பதிவு செய்ய முடியும் என்று பேராசிரியர் மகேடா தெரிவித்துள்ளார்.

பூமியின் சுற்றுச்சூழல் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கு இது மற்றுமொரு உதாரணமாகத் திகழ்கிறது. இதன் மூலம் கடலில் சுனாமி எவ்வாறு வந்து கொண்டிருக்கிறது என்பதை ஆராய முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மனைவியின் ரத்தத்தைக் குடித்த பயங்கரக் கணவன்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாமோ மாவட்டத்தின் ஷிகார்புரா கிராமத்தில் வசித்து வரும் தீபா என்ற 22 வயதுப் பெண் 3 ஆண்டுகளாகத் தன் ரத்தத்தை தினசரி குடித்து வந்ததாகத் தன் கணவர் மகேஷ் ஆஹிர்வார் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அதாவது மனைவியின் ரத்தத்தைக் குடித்தால் தனது சக்தி அதிகரிக்கும் என்பது கணவர் மகேஷ் ஆஹிர்வாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாம்!

2007ஆம் ஆண்டு தீபாவுக்கும், மகேஷ் ஆஹிர்வாருக்கும் திருமணம் நடைபெற்றது. மகேஷ் ஆஹிர்வார் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆகி சிலமாதங்களில் கணவர் மகேஷிடம் இது போன்ற விசித்திர ஆசை ஏற்பட்டது என்றும் தனது கையிலிருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி அதனை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றி குடித்து வருகிறார் என்றும் தீபா புகார் தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் கொடுமை என்னவெனில் தீபா கருத்தரித்திருந்தபோதும் ரத்தம் குடிப்பதை மகேஷ் நிறுத்தவில்லை.

பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்த தீபா குழந்தை பிறந்தவுடன் மகேஷ் மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து ரத்தத்தை கணவன் உறிஞ்சுவதால் தீபாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டது .

இதனை வெளியே தெரிவித்தால் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்று மிரட்டியுள்ளார். மேலும் பல முறை தீபா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது கணவர் மகேஷ், தீபாவை சித்தரவதை செய்துள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தீபா தாந்து தந்தையிடம் இதனைக்கூற அவர் நேராக தீபாவை அழைத்துக் கொண்டு படேரா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் அது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்று காவலர்கள் நிராகரித்தனர்.

அதன் பிறகு ஹிந்தோரியா காவல்நிலையத்தில் தற்பொது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கணவன் மகேஷ் தலைமறைவாணர்.

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அம‌ல்படு‌த்த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் கோ‌ரி‌க்கை

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பை ஏ‌ற்று நட‌ப்பா‌ண்டிலேயே சம‌ச்‌சீ‌ர் க‌ல்வ‌ியை அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளது.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌‌தீ‌ர்‌ப்பை வரவே‌ற்று‌ள்ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌ய்யு‌ம் த‌மிழக அர‌சி‌ன் முடிவு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

பாட‌ம் நட‌ப்பதை மேலு‌ம் த‌மிழக அரசு தாமத‌ம் செ‌ய்தா‌ல் மாணவ‌ர்களு‌க்கு மன உளை‌ச்ச‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று‌ம் மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

Chitika

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites