Monday 18 July 2011

சுனாமி வருவதை கண்டறிய புதிய வழிமுறை இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சாதனை

ஜப்பானைத் தாக்கிய மிகப்பெரிய பூகம்பம் அதன் விளைவான பயங்கர சுனாமிப் பேரலை ஆகியவற்றிற்கு முன் வானில் சில அடையாளங்கள் ஏற்பட்டதாக இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 250 கிமீ உயரத்தில் இந்த அடையாளம் ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த அடையாளத்தை வைத்து சுனாமி தாக்கும் சரியான நேரத்தைக் கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மார்ச் 11ஆம் தேதியன்று ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பமும் அதனையடுத்து பெரிய ஆழிப்பேரலைகளும் ஏற்பட்டன.

இந்தப் பேரலைகள் கடலின் அடியில் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கும் தருணத்தில் வானில் பச்சை நிறத்தில் ஒரு ஒளிஇழை ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. சூரிய ஒளியினால் விண்வெளியில் உள்ள அணுத்திரண்மங்கள் பிளவுண்டு பிறகு ஒன்று சேருகின்றன. இதனால் இந்த "ஏர்குளோ" (Air glow) ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுனாமிப் பேரலை கடலுக்கு அடியில் பிராயணித்துக் கொண்டிருக்கும் போது விண்வெளி புவியீர்ப்பு அலைகளை ஏற்படுத்துகிறது. இந்த அலைகள் வானில் பல கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு தன்னை பரவச்செய்யும் தன்மை கொண்டது. இதனால் விண்வெளியில் ஏற்படும் மாற்றமே இந்த பச்சைக் கீற்று போன்ற அடையாளம். காற்றின் அடர்த்திக் குறைவதால் இதனை படம் பிடிக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது போன்ற படங்களை வைத்துக் கொண்டு இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர் ஜொனாதன் மகேலா பிரான்ஸ், பிரேசில், நியூயார்க் பல்கலை. ஆஅய்வாளர்களுடன் இணைந்து இந்த அடையாளம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் ஏற்படுத்தப்படும் இந்த அலையின் சில மூலக்கூறுகள் ஜப்பானிய சுனாமியை அறிவுறுத்துவதாய் இருந்ததாக கண்டு பிடித்துள்ளனர்.

இருப்பினும் இது போன்ற ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதால் உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் சுனாமிக்கு முன்பாக வானில் அதன் அடையாளம் தெரிவது என்பது நமக்கு பல வகையில் பயன்படக்கூடியது என்று இந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சக்தி வாய்ந்த கேமராக்களைக் கொண்டு இந்த மாற்றங்களை பதிவு செய்ய முடியும் என்று பேராசிரியர் மகேடா தெரிவித்துள்ளார்.

பூமியின் சுற்றுச்சூழல் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கு இது மற்றுமொரு உதாரணமாகத் திகழ்கிறது. இதன் மூலம் கடலில் சுனாமி எவ்வாறு வந்து கொண்டிருக்கிறது என்பதை ஆராய முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

0 comments:

Post a Comment

Chitika

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites