இலங்கையில் நடந்து இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து உலக நாடுகள் இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன.
இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவும் அறிக்கை சமர்பித்துள்ளது. எனினும் இலங்கை அரசு மெத்தனமாகத் தான் இருக்கிறது.
இந்நிலையில் போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தாவிட்டால் அந்நாட்டிற்கு அளிக்கப்படும் உதவிகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்மானத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பேர்மன் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின்படி மனிதாபிமான உதவிகளைத் தவிர்த்து மற்ற நிதியுதவிகள் அனைத்தையும் நிறுத்த அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.
போர்க்குற்ற விசாரணை தவிர்தது ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம் ஆகியவற்றை அமல்படுத்தவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2010- ம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்க 13 மில்லியன் டாலர் வேண்டும் என்று அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் இந்த தீர்மானம் உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment