Monday 18 July 2011

முபாரக்:கோமா

எகிப்து முன்னாள் பிரதமர் ஹோஸ்னி முபாரக்(83). இவரது 30 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து தற்போது ராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. ஆட்சியில் இருந்த போது லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொன்று குவித்ததாகவும் முபாரக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு மற்றும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் செங்கடல் பகுதியில் உள்ள ஷாம் எல் ஷேக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி தொடங்க உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவமனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மயக்கத்தில் இருந்து அவரை மீட்க போராடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Chitika

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites