Monday 18 July 2011

உலககோப்பை வென்ற தோனியின் பேட் இன்று ஏலம்

லண்டன் : உலக கோப்பை வெற்றிக்கு பங்களித்த டோனியின் ராசியான பேட் ஏலத்தில் விடப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி, அவரது மனைவி சாக்ஷி தலைமையில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக ஒரு பள்ளியை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கு நிதி திரட்டுவதற்காக, டோனி தனது பேட்டை ஏலம் விட உள்ளார்.

லண்டனில் இன்று இரவு நடக்கும் பிரமாண்ட விருந்தில், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் ஆக காரணமான டோனியின் பேட் ஏலத்தில் விடப்படுகிறது. மேலும், இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தும், சச்சினின் உருவப்படம் வரையப்பட்ட ஓவியமும் ஏலத்தில் வருகிறது. இந்த விருந்தில், இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்களும், தொழிலதிபர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும், முன்னாள் கேப்டன்கள் கங்குலி, கும்ளே உட்பட பலரும் பங்கேற்கிறார்கள்.

இந்த விருந்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்காக ரூ.1.9 லட்சம் மற்றும் ரூ.1.25 லட்சம் மதிப்பில் இருவகையான 850 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. டிக்கெட்டுகள் அனைத்துமே விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Chitika

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites